Thanks

🙏 அன்பர்களே, உங்கள் விருப்பத்தில், திருப்தியில், பயன் பெறுதலில் நன்கொடை செலுத்துக... இதுவரை நன்கொடை செலுத்திய நல் உள்ளங்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும், வாழ்க வளமுடன்! 🙏

Let’s accept the change in yoga

யோகத்தில் மாற்றத்தை ஏற்றுக் கொள்வோம்



அனுபவம் முதிர்ச்சி ஆராய்ச்சி

எல்லா வகையிலும் உயர்த்தும்

அப்படியே இந்த யோகத்திலும்

மாற்றத்தை இனிதே கொள்வோம் 


உறவுதுணைவீடு விட்டுகாடுதேட வேண்டாம்

கௌபீனம் ஏற்றுஆடை துறக்கவேண்டாம்

தாடிமீசை வளர்த்து ஆளைமறைக்கவேண்டாம்

பட்டுதுணிவிடுத்து காவிதுணி வேண்டாம்

சித்தர்சொன்ன வாசியோகம் வேண்டாம்

வாய்முணுக்கும் மந்திரங்கள் வேண்டாம்

எவ்வகையிலும் உடல்மனம் வருத்தவேண்டாம்

எதையோ எதிர்நோக்கி முட்டிமோதவேண்டாம்


வேதாத்திரி சொன்னது மறக்கவேண்டாம்

சிவநிலை நோக்கி சவநிலைவேண்டாம்

தொட்டுத்தரும் தீட்சை முறைஎளிதானதாம்

சூடாராத ஆக்கினையில் உனையறியவே!


விளக்கம்:

இந்த உலகம் ஒவ்வொரு காலத்திலும் மறுமலர்ச்சி பெறுகிறது. இதற்கு காரணம், சிந்தனையில் உயர்ந்தோர்கள் தன் சார்ந்த இந்த சமூக மக்களை தரம் உயர்த்தி வாழ்விக்கிறார்கள். 

அந்தவகையில் சித்தர்களும், ஞானிகளும், மகான்களும் யோகத்தையும் உயர்த்தியிருக்கிறார்கள். யாரோ ஒருசிலர் கடுமையான பயிற்சிகளால்தான் “நான் யார்?” என்று உணர முடியும் என்றால் அது தவறே. 

தொட்டுத்தரும் தீட்சை முறை மகான் பரஞ்சோதி அவர்களால் உலகுக்கு தெரியவந்தது. அந்த முறையில்தான் வேதாத்திரி மகரிசி அவர்களும் தீட்சை வழங்கிவந்தார். அதுவே இன்னும் தொடர்கிறது. எனவே காலத்தை வீணாக்க வேண்டாம் என்று இக்கவி விளக்கமளிக்கிறது.

வாழ்க வளமுடன். 

Post a Comment

0 Comments